சூர்யாவுக்கு வழுக்கை தலையா? ஷாக் ஆன ரசிகர்கள்

Webdunia
சனி, 13 ஏப்ரல் 2019 (19:53 IST)
செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் மே 31 ஆதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து கே. ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படமும் வெளியாகயுள்ளது. 
 
சூர்யாவின் 38 வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் 38 வது படத்திற்கு சூரரைப் போற்று என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜிவி-யின் 70 வது படம். 
 
தொழில் அதிபர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் இப்படத்திற்காக தொழில் அதிபராக நடிக்கும் சூர்யா, வழுக்கை தலை தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறாராம்.  கதாபாத்திரத்துக்கு ஏற்ப சூர்யா தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடிப்பவர். தற்போது புதிய படத்துக்காக வழுக்கை தலையாகிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்