சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (15:56 IST)
சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ஓ மை டாக் திரைப்படம் ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக அமேசான் நிறுவனத்தோடு 4 படங்களை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி டிசம்பர் மாதம் அருண் விஜய் மற்றும் அவரின் மகன் நடித்திருக்கும் ஓ மை டாக் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அது குறித்த எந்த தகவலும் அதன் பின்னர் வெளியாகவில்லை. இதையடுத்து தற்போது அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் அந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அவரின் மகன் என மூன்று தலைமுறை குடும்ப நடிகர்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்