பிரபல இயக்குநர் இயக்கத்தில்... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் சூர்யா !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (17:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா காப்பன் படத்தையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் அவரது சொந்தத் தயாரிப்பில் சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

கொரொனா காலக்கட்டம் என்பதால் இதன் வெளியீடு தேதி தள்ளிக்கொண்டே போகிறது.
இந்த நிலையில்,  சூர்யா அடுத்து ஹரியின் இயக்கத்தில் அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார்.

குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் சூர்யா இரட்டை வேடத்த்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்