விடுதலை படத்தை வெற்றிமாறன் தொடங்கும் முன்பே வாடிவாசல் படத்தை சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தாணுவோடு இணைந்து அறிவித்தார். ஆனால் சிறிய பட்ஜெட்டில் தொடங்கிய விடுதலை நான்கு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டதால் இன்னும் வாடிவாசல் தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் வாடிவாசல் கைவிடப்பட்டு விட்டது என்றெல்லாம் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைப் படக்குழு மறுத்தது.
வாடிவாசல் படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தை நீண்ட நாட்கள் ஷூட் செய்துகொண்டே இருப்பதுதான் என்று சொல்லப்பட்டது.