கைதி 2 படத்துக்கு நான்தான் இசையமைப்பாளர்… சாம் சி எஸ் அறிவிப்பு!

vinoth

சனி, 7 டிசம்பர் 2024 (08:06 IST)
மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.

சமீபத்தில் மீண்டும் விஜய்யின் லியோ படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கைதி முதல் பாகத்துக்கு இசையமைத்த சாம் சி எஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் மீண்டும் லோகேஷுடன் இணைய உள்ளதை உறுதிப் படுத்தியுள்ளார். கைதி படத்துக்கு பிறகு லோகேஷ் அனிருத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். அவர்களின் கூட்டணியில் உருவாகும் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பெரியளவில் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்