அஜித் படம் குறித்த வதந்திக்கு சுரேஷ் சந்திரா வைத்த முற்றுப்புள்ளி

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (22:00 IST)
அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்த நிறுவனம் ஒன்று சமீபத்தில் இந்த படத்தின் சர்ச்சைக்குரிய வசூல் டுவீட் ஒன்றை பதிவு செய்து நடுநிலை ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டது. விஸ்வாசம்' படத்தின் வெற்றிக்கு இந்த டுவீட் ஒரு கரும்புள்ளியாகவே கருதப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த நிறுவனத்திற்கு ஜால்ரா போட்ட சில டிராக்கர்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் ஒரு படம் நடிக்கவுள்ளதாகவும், நயன்தாரா ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் போனிகபூர் அடுத்த தயாரிக்கவிருக்கும் இரண்டு படங்களில் நடிக்க அஜித் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே 2020ஆம் ஆண்டு வரை அவர் வேறு எந்த நிறுவனத்தின் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் தேவையில்லாமல் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்