சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு - திரிவிக்ரம் இணையும் புதிய படம் ! இன்று முக்கிய அறிவிப்பு

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (15:55 IST)
தெலுங்கு  சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் புதிய படம்குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. இவர்  நடிப்பில் வெளியான படம் சர்க்காரு வாரு பட்டா. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, ராஜமெளலி இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில்  நடிக்க மகேஷ்பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஆப்பிரிக்க காடுகளில் நடப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், மகேஷ்பாபுவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என சமூக வலைதளங்களில் வெளியாகிறது.

மகேஷ்பாபுவின் 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் இயக்கவுள்ளார். இதனால் சினிமா ரசிகர்கள் இந்த அதிகாரப்பூர்வ அறிவுப்புகாக காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்