ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

J.Durai
புதன், 15 மே 2024 (18:12 IST)
எம் டிவியில் சன்னி லியோன் தொகுத்து வழங்கும் ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. 
 
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்த வாரம் காதலர்களை பிரிக்கும் வேலையை செய்யும் குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத் காதலர்கள் மத்தியில் ஏகப்பட்ட டாஸ்க்குகளை கொடுத்து அவர்களை போட்டி போட வைத்துள்ளார்.
 
சமீபத்திய சவாலில், ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் ’சட்டி - பட்டீஸ்' ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் மோதினர், நட்பு மற்றும் காதலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பல்வேறு சோதைனைகளும் போட்டியாளர்களுக்கான ட்விஸ்ட்டுகளும் இடம்பெற்றன. இந்த வினோதமான சட்டிகளை அணியும் போது வரவிருக்கும் சவாலில் அனைத்து நண்பர்களும் அவர்களுக்கான இடத்தை பிடித்தார்களா? இல்லையா என்பது தான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. 
 
ஒரு வலுவான திருப்பத்திற்குப் பிறகு, வெற்றி சிலருக்கு கடினமாக மாறும், மற்றவர்களுக்கு உள்ளுக்குள் இருந்து வெற்றி பெற வேண்டும் என்கிற தீயை பற்ற வைக்கிறது. நாயரா, சச்சின் மற்றும் அர்பாஸ் அதுபோன்ற ஒரு கட்டத்தில் சிக்கிக் கொண்டனர். மறுபுறம், போட்டியாளர் ஆடி சற்றே கோபத்தில் இருந்தார், ஏனெனில் அவரை விளையாட விடாமல் செய்யாததற்காக சிவெட் அவரை இழுத்துச் சென்றார், இது ஸ்ப்ளிட்ஸ்வில்லன்களிடையே பதட்டங்களைத் தூண்டியது. 
 
ஒரு காலத்தில் ஆடி மற்றும் சிவெட் இருவரும் அசைக்க முடியாத காதலில் இருந்து வந்த நிலையில், தற்போது அதனை முடிவுக்கு கொண்டு வரும அளவுக்கு இருவரிடையே மோதல் வெடித்துள்ளது. அமேஹா தனது முன்னாள் காதலரின் டி-ஷர்ட்டை அணிந்தபோது தேவ் கரனின் முகம் முற்றிலுமாக வாடிப் போய் விட்டது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதற்கிடையில், பழைய பகையை  மீண்டும் தூண்டும் விதமாக அனிகாவின் செயல்பாடுகள் ரசிகர்களுக்கு அவர் ஏன் லக்ஷாயுடன் பிரிந்தார் என்பதை நினைவூட்டுகிறது.
 
பதட்டங்கள் அதிகமாக இருப்பதால், போட்டியாளர்கள் மத்தியில் ஈகோக்கள் மற்றும் உணர்ச்சிகளின் போர்க்களமாக உள்ளது, மன்னிப்பு, எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சிவெட் மீதான குற்றச்சாட்டுகள் போட்டியாளர்களின் உறவுகள் மற்றும் விசுவாசங்களை அவிழ்த்து விடுகின்றன.
 
தனுஜின் தலையீடு இன்னொரு சிக்கலை உண்டாக்க அங்கு போட்டியாளர்கள் தங்களுக்காகவோ அல்லது தங்கள் தொடர்புகளுக்காகவோ வாதிட்டனர். மனநிலை பதட்டமாக இருந்தபோதிலும், இதயப்பூர்வமான முறையீடுகள் மற்றும் உணர்ச்சிகரமான பிரச்சனைகள் கிளம்பிய நிலையில், ஆடியன்ஸுக்கு சூப்பர் விருந்தாக இந்த எபிசோடு அமைந்துள்ளது.
 
இதற்கிடையில், உர்ஃபியின் குறும்புத்தனமான நடவடிக்கைகள் மேலும், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல உள்ளது. அவர் உள்ளே புகுந்து பண்ண வேலை அனைவருக்கும் ஆச்சரியத்தையும், அடுத்து என்ன வரப்போகிறது என்பது குறித்த ஆர்வத்தையும் தூண்டியது. நயிராவும் அர்பாஸும் ஒரு கடினமான முடிவை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அதன் காரணமாக உண்டானது. 
 
அதே நேரத்தில் சச்சினின் தலைவிதி ஆபத்தான நிலையில் உள்ளது. நாயராவின் நட்பு கேள்விக்குள்ளானது, சச்சின் புறப்படத் தயாராக இருந்தபோதிலும், மிஸ்சீஃப் பாக்ஸ் தலையீடு காரணமாக சிக்கல் மேலும், பெரிதானது. இதனால் ரிக்டென் மற்றும் ஆயுஷ்மான் இருவரும் தூக்கி எறியப்பட்டனர், அதே நேரத்தில் சச்சின் ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் தனது பயணத்தைத் தொடர வாய்ப்பும் கிடைத்தது.
 
உர்ஃபி ஜாவேத்தின் அதிரடி ஆட்டம் ஸ்ப்ளிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அடுத்து என்ன திருப்பங்கள் காத்திருக்கின்றன என்பதை ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் உள்ள போட்டியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
 
பல பிரச்சனைகளுடன் அந்த இரவு முடிய மறுநாள் காலை மேலும், பதட்டங்கள் அதிகரித்தன. நயிரா தனது நண்பர்கள் சச்சின் மற்றும் திக்விஜய் ஆகியோருடன் சூடான வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினார். பல்வேறு குற்றச்சாட்டுகள் பறந்தபோது பழைய தீராக் காயங்கள் மீண்டும் தோன்றின, இது வில்லாவில் உள்ள காதலர்கள் மத்தியில் சிக்கலை உருவாக்க அவர்களின் உறவுகளில் உள்ள பலவீனங்களை வெளிக்கொண்டு வந்து காட்டியது. உர்ஃபியின் குறும்புத்தனமான விளையாட்டுக்கள் போட்டியாளர்களை பல்வேறு மனநிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அடுத்தடுத்த சவால், உர்பியால் வடிவமைக்கப்பட்ட "சட்டி பட்டி", ஜாலியான குத்துச்சண்டை மற்றும் இதயத்தைத் தூண்டும் செயல்களை உள்ளடக்கியது, ஒவ்வொரு சவால் வழியாக செல்லும்போது,உணர்ச்சிகரமான நடனங்கள் முதல் மென்மையான தருணங்கள் வரை, குழப்பங்களுக்கு மத்தியில் காதல் மலர்வதை வில்லா கண்டது. 
 
இந்த போட்டியின் இறுதியில் ஸ்ப்ளிட்வில்லா போட்டியாளர்கள் ஒன்றாக ஒரே அணியில் தங்கள் வலிமையை காட்டுவார்களா? அல்லது விளையாட்டின் அழுத்தங்களுக்கு அடிபணிவார்களா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்