ஒரு கோடி கொடுத்து தலைப்பின் உரிமையை வாங்கிய ராகவா லாரன்ஸ்!

Webdunia
வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:36 IST)
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் டைட்டிலுக்காக ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. பி வாசு இயக்க ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது.  மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் சிவாஜி பிலிம்ஸ் வசம் உள்ள நிலையில் அதை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாம் தயாரிப்பு நிறுவனம். மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ளது இந்த திரைப்படம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்