தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான துரோகி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறியப்பட்டார்.
அதன்பின்னர், மாதவன்- ரித்திகா சிங்க் நடிப்பில் இறுதிச் சுற்று படத்தை இயக்கினார்.
இப்படத்தை அடுத்து, சூர்யா- அபர்ணா பாலமுரளி நடிப்பில் சூரரைப் போற்று படதிதை இயக்கினார்.
இப்படம் தேசிய விருதை வென்றது. இப்படம் தற்போது, இப்படம் இந்தியில் அக்ஷ்ய்குமார் நடிப்பில், இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது.
இந்தப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டு, சுதா கொங்கராவுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தன் கையில் காயம் ஏற்பட்டுள்ளது குறித்து, சுதாகொங்கரா தன் டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில் ஒரு மாதங்களாக அதிக வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்
Super painful. Super annoying! On a break for a month