சென்னையில் தொடங்கிய காஞ்சனா 3 படப்படிப்பு: வேதிகா ட்வீட்

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2017 (13:22 IST)
ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இதனை அப்படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவரான நடிகை வேதிகா தெரிவித்துள்ளார்.

 
பேய் படங்களான 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' வரிசையில் தற்போது 'காஞ்சனா 3' படத்தின் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இதிலும் தானே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார்.
 
இப்படத்தில் மூன்று நாயகிகள் உள்ளனர். அவர்கள் ஓவியா, வேதிகா மற்றும் நிகிதா என மூன்று நாயகிகள் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி உள்ளிட்டோரும் 'காஞ்சனா 3' படத்தில் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளனர்.





 
 
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக வெற்றி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நடிகை வேதிகா ட்விட்டரில் கேரவன் போட்டோ ஒன்றை  பதிவிட்டு, தமிழில் தனது அடுத்த படமான 'காஞ்சனா 3' ஷூட்டிங் தொடங்கிவிட்டதாக ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்