நம்பி வந்தவங்கள உயிரோட கொண்டு வந்து சேக்கணும்... "சூரரைப் போற்று" டயலாக் ப்ரோமோ!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (14:00 IST)
"சூரரைப் போற்று" படத்தின் டயலாக் ப்ரோமோ ரிலீஸ்

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வரும் நவம்பர் 12 ஆம் தேதி ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் டிரைலர், அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

காட்சிகளாக மட்டுமில்லாமல் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் கூட ரசிகர்கள் ரசிக்கும் விதமாக உள்ளது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தின் டயலாக் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகி சூர்யா ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "ஒரு விமானி தன்னை நம்பி வந்தவர்களை உயிரோடு கொண்டு வந்து சேர்க்கணும்" என்ற அழுத்தமான இந்த வசனம் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்