ஆம்பளைன்னா விஜய் மாதிரி கெத்தா இருக்கணும்! நடிகை சோனா

Webdunia
புதன், 13 பிப்ரவரி 2019 (08:16 IST)
தளபதி விஜய்யை பிடிக்காத பெண்களே இருக்க முடியாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் திரையுலகில் இருக்கும் பெரும்பாலான நடிகைகளும் விஜய் ரசிகைகளாகவே உள்ளனர்.

அந்த வகையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கவர்ச்சி நடிகை சோனா, 'தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறினார். ஒரு ஆம்பள என்றால் பெண்களை கண்டவுடன் வழியக்கூடாது என்றும், விஜய் போன்று பார்க்க கெத்தாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் ஒரு ஆணை பார்த்தவுடன் மரியாதை கலந்த பயம் வரவேண்டும் என்றும், விஜய்யை பார்க்கும்போது மட்டுமே தனக்கு மரியாதை கலந்த பயம் வருவதாக கூறிய நடிகை சோனா, மொத்தத்தில் ஆம்பள, ஆம்பளயாக விஜய் போன்று இருக்க வேண்டும் என்று கூறினார்.

விஜய் நடித்த 'ஷாஜஹான்' என்ற படத்தில் மட்டும் நடிகை சோனா சோனா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்