வேலைக்காரியுடன் ரகசிய உறவில் மகன்- நடிகர் அர்னால்ட் ஓபன் டாக்

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (18:13 IST)
பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட், வேலைக்காரியுடனான ரகசிய உறவில் பிறந்த மகன் பற்றி தெரிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஆர்னால்ட். இவர், ஆரம்ப காலக்கட்டத்தில் பாடி பில்டிங்கில் கவனம் செலுத்தி, மிஸ்டர் ஒலிம்பிக் டைட்டில்களை வென்ற நிலையில், சினிமாவில் நுழைந்தார்.

டெர்மினேட்டர், எஸ்கேப், எக்ஸ்பேண்டபில்ஸ்  உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இந்த நிலையில்,  அர்னால்ட் ஸ்க்வார்ட்ஜெனேகர் ( 75 வயது), தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி 3 பாகங்கள் கொண்ட ஆவண தொடராக வெளியிட உள்ளார்.

இந்த ஆவண படம் வரும் 7 ஆம் தேதி வெளியிட இருந்தால், இந்த நிலையில், அவரது வாழ்வில் இருந்த ரகசிய உறவு பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

‘’கடந்த 1996 ஆம் ஆண்டு அர்னால்ட் வீட்டின் பணியாளராக இருந்த மில்ட்ரெட் பயீனாவுக்கும், அர்னால்டுக்கும் இடையே ரகசிய உறவு ஏற்பட்டது. அர்னால்டின் மனைவி மரியாவுக்கு தெரியவில்லை.

அதன்பின்னர், 9 மாதங்களுக்கு பின்னர் கர்ப்பிணியான மில்ட்ரெடுக்கு குழந்தை பிறந்துள்ளது. சில நாட்கள் கழித்து மரியாவுக்கு கிறிஸ்டோபர்  என்ற மகன் பிறந்துள்ளார்.

மில்ட்ரெட்டிற்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு ஜோசப் என்று பெயரிடப்பட்ட நிலையில், அக்குழந்தைக்கு அப்பா அர்னால்ட் என்று யாருக்கும் தெரியவிலை.

அதன்பின்னர், ஜோசப் வளர வளர அர்னால்டின் சாயல் அவருக்கு இருந்தால் மரியா இந்த உண்மையை தெரிந்துகொண்டதாக’’ அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்