சிவகார்த்திகேயனுக்கு கண்டிஷன் போட்ட ஏ.ஆர். முருகதாஸ்

Sinoj
புதன், 20 மார்ச் 2024 (22:46 IST)
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸின் பட ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது.
 
இப்பட ஷூட்டிங் படக்குழு திட்டமிட்டபடி நன்றாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், ஏற்கனவே அவர் கமிட்டாகி ஒப்புக்கொண்ட கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அமரன் படத்திற்கு இன்னும் அவர் 20 நாள்கள் ஷூட்டிற்கு தேதி கொடுக்க வேண்டும்.
 
அதற்காக வேண்டி, ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு பிரேக் விட்டுவிட்டு அமரன் பட ஷூட்டிங்கிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார் சிவகார்த்திகேயன்.
 
ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து, சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாலும் ஐந்து ஆண்டுகளுகாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாலும், இப்பட ஷூட்டிங் ஜூன் அல்லது ஜீலையில் தொடங்கும் என கூறப்படுகிறது.
 
எனவே ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனிடம் எனக்கும் அடுத்த படமுண்டு. அதனால் இருவரும் இப்படத்தை முடித்துக்கொடுத்து விட்டு வேறு படத்திற்குச் செல்லலாம் என்று கண்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்