காந்தி ஜெயந்தி அன்று பிரேம்ஜியின் சத்திய சோதனை போஸ்டர் – வெளியிட்ட சிவகார்த்திகேயன்!

வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:06 IST)
இசையமைப்பாளர் பிரேம்ஜி அமரன் நடித்துள்ள சத்யசோதனை படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும் நகைச்சுவை நடிகருமாகவும் தமிழ் சினிமாவில் அறியப்படுபவர் பிரேம்ஜி அமரன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள சத்தியசோதனை என்ற படத்தின் முதல் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்படம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தை ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். அதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்