கங்கை அமரனின் மகனும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியுமான பிரேம்ஜி அமரன் சிம்புவின் வல்லவன் திரைப்படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் அவரின் நகைச்சுவை காட்சிகள் பிரபலமாகவே, நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இடையில் சில படங்களுக்கு இசையமைத்த அவர் இரு பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். தற்போது சிம்புவோடு மாநாடு படத்தில் நடித்து வரும் அவர் தனது திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில் ‘வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என சொல்லி விட்டேன். வாழ்க்கையில் ஜாலியாக இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டிலாம். தனியாக வாழ்வதே ஹாப்பி. கல்யாணம் பண்ண சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினார்கள்.ஆனால் முடியவே முடியாது என்று கூறிவிட்டேன்’ எனக் கூறியுள்ளார்.