தெலுங்கு மார்கெட் மீது கவனத்தை திருப்பும் SK - டாக்டரை வைத்து டெஸ்டிங்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:44 IST)
டாக்டர் படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. 

 
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியிருக்கும் படம் டாக்டர். இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இதனிடையே டாக்டர் படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
டாக்டர் படம் தமிழில் வெளியாகும் அதேநாளில் வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகிறது. தெலுங்கில் சிவகார்த்திகேயனுக்கு சின்ன அளவில் மார்க்கெட் உள்ளதாலும், இப்படத்தின் நாயகி ப்ரியங்கா அருள் மோகனுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்