பாலா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரிலீஸ் செய்த சிவகார்த்திகேயன்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (11:32 IST)
இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்த ’வர்மா’ படம் ரிலீஸ் ஆகாத நிலையில் அவருடைய அடுத்த படம் எது என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை 
 
இந்த நிலையில் பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்த ஒரு திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. பாலாவின் பி ஸ்டுடியோ ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை தயாரித்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு திரைப்படத்தை தயாரித்து வருகிறது 
 
பத்மகுமார் என்பவர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இந்த படம் மலையாள படம் ஒன்றின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தபடத்திற்கு ’விசித்திரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் டீசர் டிரைலர் ஆகியவை வெளியாகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்கே சுரேஷ் ஜோடியாக நடிகை பூர்ணா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்