கோவாவில் கொண்டாட்டத்துடன் துவங்கிய டாக்டர் பட ஷூட்டிங்...!

வெள்ளி, 14 பிப்ரவரி 2020 (13:33 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான "நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது. 
 
அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடித்து வருகிறார். நெல்சன்,  நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அதையடுத்து தனது இரண்டாவதாக டாக்டர் படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிவருகிறார். 
 
KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். கேங் லீடர் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று கோவாவில் துவங்குகிறது என படக்குழு அறிவித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்