டாக்டர் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட மறைமுக லாபம்!

Webdunia
வியாழன், 14 அக்டோபர் 2021 (16:44 IST)
டாக்டர் படத்தின் இமாலய வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மறைமுகமாக ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது.

டாக்டர் படத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களை தீர்க்க சிவகார்த்திகேயன்தான் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே வேலைக்காரன், சீமராஜா மற்றும் ஹீரோ ஆகிய படங்களின் தோல்வியால் பல கோடிகள் கடனாளி ஆனார் சிவகார்த்திகேயன். இந்த கடன்களை அடைப்பதற்காக கே ஜே ஆர் ராஜேஷுக்கு சம்பளம் வாங்காமல சில படங்களை நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதையடுத்து ஒரு படமாக இன்று டாக்டர் ரிலிஸ் ஆகியுள்ளது.

ஆனால் இந்த படத்த்தின் ரிலீஸும் சுமூகமாக நடக்கவில்லையாம். படத்தின் மீது கடன் கொடுத்தவர்கள் கடைசி கட்டத்தில் நெருக்க அதனால் கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் வேறு வழியில்லாமல் உதயநிதி ஸ்டாலின் மூலமாக பிரச்சனையை சுமூகமாக தீர்க்க முயன்றுள்ளார். இதையடுத்து மதுரை அன்பு தரவேண்டிய 27 கோடியை உடனடியாக பைனான்சியர்களுக்கு கொடுத்துள்ளார். அதையடுத்துதான் படம் ரிலீஸாகியுள்ளதாம். ஏற்கனவே கடன் பிரச்சனைகளை தீர்க்கதான் வரிசையாக படங்களை நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இப்படி ஒவ்வொரு படத்தின் மூலமும் மேலும் கடனாளியாகி வருகிறார்.

மேலும் இந்த கடன் தொகையை ஏற்றுக்கொண்டதன் பேரில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் என்றே ஒன்று இல்லாத நிலை. அதுமட்டும் இல்லாமல் சம்பளத்தைத் தாண்டியும் அவர் கடன் தொகையில் சிக்கிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் மறைமுகமாக சிவகார்த்திகேயனுக்கு ஒரு நன்மை கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 80 கோடி ரூபாயில் உருவாகப்பட்ட அவரின் அயலான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்வது என்ற சங்கடத்தில் இருந்தனர். ஆனால் டாக்டர் படத்தின் பேய் ஓட்டத்தால் இப்போது அயலானை எப்படியும் கரை சேர்த்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்