வடிவேல் பாலாஜியின் பிள்ளைகளுக்கு சிவகார்த்திகேயன் செய்த பெரும் உதவி!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:51 IST)
வடிவேல் பாலாஜியின் குடும்பத்திற்கு உதவ முன்வந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி. 
 
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வசதி இல்லாததால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மருத்துவமனையிலே இறந்துவிட்டார். அவரது மறைவுக்கு அவரின் சக சின்னத்திரை கலைஞர்கள் அஞ்சலியை செலுத்தினர்.
 
சென்னை சேத்துப்பட்டில் டி.வி. காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தினார். அதோடு வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து நிதியுதவியும் அளித்தார் விஜய் சேதுபதி. 
 
அதோடு நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் பற்றி அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். மேலும், வடிவேல் பாலாஜிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களது படிப்பு செலவை தான் ஏற்று கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் கூறி இருக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்