ரூ.175 கோடி வைரத்தை நெற்றியில் பொருத்திய பாடகர் !

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (22:06 IST)
நம் வாழும் இந்த உலகில் ஜெஃப்பெசோஸ், எலான் மஸ்க் போன்ற மிகப்பெரிய முதல் நிலை கோடீஸ்வரர்களும் உண்டு, ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிப்போரும் உண்டு. அதுவும் இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வறுமையில் உழல்வோரைப் பற்றிச் சொல்லவேவேண்டாம்.liluzivert


இந்நிலையில் அதிகம் பணம் படைத்தவர்கள் தங்களின் பணப்பெருமைக்கு என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.


அது இன்னொருமுறை உண்மையாகியுள்ளது. பிரபல ராப் சிங்கர் சிமியர் பிசில் உட்ஸ் ரூ.175 கோடி மதிப்புள்ள இளஞ்சிவப்பு வைரத்தை தனது நெற்றியில் பொருத்தியுள்ளார்.

இதற்கு அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.  இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், நெற்றியில் மட்டுமல்ல காதில், கைவிரலிலும் வைரங்கள் அணிந்துள்ளார். மேலும் தான் ஒரு வைரமாக மாறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Marni Life( NO STYLIST)1600 (@liluzivert)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்