கடந்த 2022 ஆம் ஆண்டு 2022 சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியானது. இது கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக உருவானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் ரிலீஸான நிலையில் சராசரியான வசூலையும் கலவையான விமர்சனங்களையுமே பெற்றது.
அதில் “வெந்து தணிந்தது காடு – இரண்டாம் பாகத்துக்கான கதை தயார். ஆனால் முதல் பாகமே இன்னும் பிரம்மாண்டமாக இருக்கவேண்டும் என சிம்பு விரும்பினார். அதனால் முதல் பாகம் ரிலீஸாகி 25 நாட்களில் அவர் இரண்டாம் பாகத்தின் மேல் ஆர்வம் இழக்க தொடங்கிவிட்டார். எங்களுக்குள் இது சம்மந்தமாக சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன” எனக் கூறியுள்ளார்.