சில்க் சுமிதாவின் கடைசி திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ள இயக்குநர்

Webdunia
சனி, 15 செப்டம்பர் 2018 (18:40 IST)
கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் ரிலீஸ் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

 
சில்க் சுமிதா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகை. கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சிறந்த நடிகையும் ஆவார். இவரது தற்கொலை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
இவரது வாழ்க்கை குறித்து பாலிவுட்டில் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இவர் அறிமுகம் செய்த இயக்குநர் திருப்பதி ராஜன் இயக்கத்தில் சில்க் சுமிதா கடைசியாக நடித்த ராக தாளங்கள் என்ற திரைப்படம் வெளியாகம் இருந்தது.
 
அப்போது சென்சாரில் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளியாகவில்லை. தற்போது இந்த திரைப்படத்தை இயக்குநர் திருப்பதி ராஜன் வெளியிட முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்