மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்... ஸ்ருதி ஹாசன் உருக்கமான பதிவு!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (14:14 IST)
வாரிசு நடிகையான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஏழாம் அறிவு படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரம், குழந்தை பாடகி என தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 
 
இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியுடன் 'வால்டர் வீரய்யா', மற்றும் பாலா கிருஷ்ணாவின் 'வீர சிம்ம ரெட்டி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 
 
அண்மையில் 'வீர சிம்ம ரெட்டி'  படத்தின் ப்ரமோஷனில் கலந்துக்கொண்ட ஸ்ருதி ஹாசன் சிரஞ்சீவியின்  'வால்டர் வீரய்யா பட ப்ரோமோஷனில் கலந்துக்கொள்ளவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 
 
மன்னித்துவிடுங்கள்! நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை" அன்றாட வாழ்வில் வீட்டிலோ அல்லது படப்பிடிப்பிலோ ஏதேனும் வருத்தப்படுமளவிற்கு நடந்துவிட்டால்  நான் மனவுளைச்சலுக்கு ஆளாகி விடுவேன். அப்படித்தான் தற்போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வருகிறேன் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்