சிவாஜி குடும்ப சொத்துப் பிரச்சனை: வழக்கை தள்ளிவைத்த் நீதிபதி

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (20:46 IST)
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் ஆகிய 2 மகன்களும் சாந்தி, ராஜ்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

இந் நிலையில் சிவாஜி கணேசனின் இரண்டு மகள்களான சாந்தி, ராஜ்வி ஆகிய இருவரும் பிரபு மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தங்கள் தந்தை சிவாஜி கணேசன் எந்தவித உயிலும் எழுதி வைக்கவில்லை என்றும் ஆனால் போலியான உயில்கள் மூலம் சில சொத்துக்களை ராம்குமார் பிரபு ஆகிய இருவரும் விற்று விட்டனர் என்றும் வழக்கில் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களுக்கு தாய் வழி வந்த சொத்திலும் பங்கு தரவில்லை என்றும் ஆயிரம் சவரன் நகைகள் இருப்பதாகவும், அதிலும் பங்கு தரவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதில் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிவாஜி கணேசன் எழுதிவைத்த உயில் ஜோடிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு தவறானது என்று நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தரப்பில் வக்கீல் வாதிட்டனர். இதைக்கேட்ட நீதிபதில இந்த வழக்கு ஜூலை 21 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்