நீங்க ரொம்ப கருணைமிக்கவர் ஷகீலா மம்மி… உருகிய மணிமேகலை!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:52 IST)
தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தவர் மணிமேகலை.

கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மணிமேகலை போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இருக்கு சமீபத்தில் காலில் அடிபட்டுவிட்டதாக கூறி சில வாரங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாது என கூறினார். 

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரோடு பங்கேற்ற நடிகை ஷகீலா இப்போது மணிமேகலையை சென்று சந்தித்துள்ளார். இருவரும் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மணிமேகலை ‘லவ்யு ஷகீலா மம்மி… எங்கள் வீட்டுக்கு வந்து நேர்மறையான வார்த்தைகள் மூலம் ஆறுதல் அளித்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் கருணை மிகுந்தவர்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்