இப்படி ஒரு நடிகர் கெடச்சிட்டா வேற என்ன வேணும்… செல்வராகவன் பகிர்ந்த புகைப்படம்!

வெள்ளி, 11 மார்ச் 2022 (17:37 IST)
நானே வருவேன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து செல்வராகவன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஆகிய நால்வர் கூட்டணி புதுப்பேட்டை திரைப்படத்துக்கு பின்னர் நானே வருவேன் படத்தில் இணைந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தனுஷ், யோகி பாபு மற்றும் இந்துஜா ஆகியவர்கள் சம்மந்தப்பட்ட காட்சிகளை செல்வராகவன் இயக்கி வருகிறார்.

ஏற்கனவே இரண்டு கட்டமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்து ஒரு சிறு இடைவேளை கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த இடைவேளையில் தனுஷ் தனது தெலுங்கு படமான வாத்தியில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் நேற்று இன்று நானே வருவேன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தனுஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள செல்வராகவன் ‘நாம் மனதில் நினைப்பதை முழுமையாகக் கொடுக்கும் ஒரு நடிகன் கிடைப்பதெல்லாம் ஒரு வரம்தான்’ என தனது தம்பியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்