உடனே ஒரு படம் பண்ணலாமா…. வாய்விட்டு கேட்ட தனுஷ்? வெற்றிமாறன் சொன்ன பதிலால் அப்செட்!

வெள்ளி, 11 மார்ச் 2022 (16:16 IST)
நடிகர் தனுஷ் தன்னுடைய ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இய்க்குனர் வெற்றிமாறனை முதன்மை இடத்தில் வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்- இயக்குனர் ஹிட் காம்பினேஷனில் தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் முக்கியமான இடம் உண்டு. அவர்கள் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய அனைத்து படங்களும் அவர்களின் பேர்சொல்லும் படங்களாக அமைந்தன.

இப்போது வெற்றிமாறன் விடுதலை, வாடிவாசல், கமல் படம், விஜய் படம் என அடுத்தடுத்து தன்னுடைய பட வரிசையை வைத்துள்ளார். இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் வெற்றிமாறனிடம் உடனடியாக இருவரும் சேர்ந்து ஏதாவது படம் பண்ணலாமா எனக் கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் வெற்றிமாறன் தன்னுடைய படங்களில் பிஸியாக இருப்பதால் அதை நிராகரித்துள்ளதாகவும், அதனால் தனுஷ் அப்செட்டில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Source வலைப்பேச்சு
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்