தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு படத்தை வித்துருங்க: எஸ்.வி.சேகர் ஐடியா

Webdunia
ஞாயிறு, 20 ஜனவரி 2019 (15:52 IST)
தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனமாக இருந்து, முதல் நாள் முதல் காட்சி முடியும் முன்னரே இணையதளத்தில் திருட்டுத்தனமாக புதிய படங்களை பதிவு செய்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். இந்த இணையதளத்தை எப்படி அழிப்பது, எப்படி முடக்குவது என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் விஷால் பலவித நடவடிக்கை எடுத்தும் அவருக்கு இன்றுவரை வெற்றி கிடைக்கவில்லை

இந்த நிலையில் 'தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவது குறித்து கருத்து கூறிய எஸ்.வி.சேகர், 'இனிமேல் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை குறை கூறுவது அர்த்தமே கிடையாது. விஞ்ஞான வளர்ச்சி வந்துவிட்டது. செல்போன் வந்தபின்னர் எல்லோரும் போட்டோகிராபராகிவிட்டார்கள். அதனால் இனிமேல் யாரும் போட்டோ எடுக்கக்கூடாது என்று சொல்ல முடியுமா?

இதனால் முதல் நாள் படத்தை போடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு படத்தை விற்றுவிடுங்கள். அதிகாரபூர்வமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வரட்டும்' என்று அதிர்ச்சி கருத்து ஒன்றை கூறியுள்ளார். திருட்டுத்தனம் செய்யும் ஒரு நபருக்கு படத்தை விற்க சொல்லும் எஸ்.வி.சேகரின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்