சீதக்காதி படத்துக்கு திடீர் சிக்கல்

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (10:35 IST)
விஜய் சேதுபதி நடிப்பில் சீதிக்காதி படம் இன்று வெளியாகவுள்ளது. இதில்  அய்யா ஆதிமூலம் கேரக்டரில் நாடக நடிகராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்திற்கு திடீரென சிக்கல் எழுந்துள்ளது.


 
இப்படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ் கீழக்கரையை சேர்ந்த முகமது சாலையா உசேன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார
 
கீழக்கரையில் வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதியின் வழி வந்தவர் முகமது.
 
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் இந்த படமானது எங்கள் முன்னோரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருக்கலாம் என்பதால் என்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
 
இந்த இன்று (வியாழன்) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்