மதுரையில் மக்கள் இயக்குனராக முடிசூட்டப்பட்ட சீனு ராமசாமி

Webdunia
சனி, 28 மார்ச் 2015 (16:08 IST)
சினிமாக்காரர்களுக்கு மட்டும் கேட்காமலே இலவசமாக கிடைப்பது பட்டங்கள். மக்களின் முதல்வர் மாதிரி மக்கள் இயக்குனர் விருது இயக்குனர் சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது.
 
மதுரை கல்லூரியின் சார்பில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
 
"சாதாரணர்களின் வாழ்வியலை எதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர். 
 
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டிய சீனு ராமசாமிக்கு மக்கள் இயக்குனர் என்னும் விருதை வழங்குவதில் மதுரைக்கல்லூரி பண்பாட்டுக்கழகம் பெருமை கொள்கிறது" என விருது பட்டயம் வாசித்து மேடையில் இயக்குனருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது.