தோழர் பாண்டியன்’ என்று டைட்டில் வைத்ததே அவருக்காகத்தான்: சத்யராஜ்

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:58 IST)
கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் பழம்பெரும் அரசியல்வாதியுமான தா பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானதை அடுத்து பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் 
 
அந்த வகையில் தா பாண்டியன் அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவர் நடிகர் சத்யராஜ். இவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தா பாண்டியன் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அந்த இரங்கல் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:
 
ஈழ விடுதலை ஆதரவு கூட்டங்களிலும் அவரோடு நான் கலந்து கொண்டிருக்கிறேன். அரசியலில் நேர்மையும் கொண்ட கொள்கையில் உறுதியும் கொண்டவர். அவருடைய இழப்பு பெரிய இழப்பு. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, மரியாதையின் காரணமாக என்னுடைய இனிய நண்பர் மணிவண்ணன் இயக்கத்தில் நான் நடித்த ஒரு படத்திற்கு ’தோழர் பாண்டியன்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தோம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் போராளி இழந்தது மிகவும் வருந்தத்தக்க விஷயம். அவருடைய குடும்பத்தாருக்கும் பொதுவுடமை தோழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்