கே எஸ் ரவிக்குமார் & சத்யராஜ் படம் ட்ராப் – திருப்பூர் சுப்ரமண்யம் அறிவிப்பு!

Webdunia
சனி, 23 ஜனவரி 2021 (09:53 IST)
திருப்பூர் சுப்ரமண்யம் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் இணைந்து கூட்டுத்தயாரிப்பாக தயாரிக்க இருந்த திரைப்படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில் சதவீத அடிப்படையில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியவர்களுக்கு சம்பளம் கொடுத்து ஒரு படம் தயாரிப்பதற்கு முடிவானது. அந்த படத்தை இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்க, சத்யராஜ் நடிப்பதாக முடிவானது. தயாரிப்பு செலவான் 2 கோடியை 200 ஷேர்களாக பிரித்து 200 தயாரிப்பாளர்களுக்கு விற்பதற்கான வேலைகள் நடந்தன.

ஆனால் நீண்ட காலமாக அந்த படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில் இப்போது அந்த படம் ட்ராப் செய்யப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தில் ஆர்வமாக இருந்த திருப்பூர் சுப்ரமண்யம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்