சினிமா என்னை தனுஷோடு ஒரு குடும்பமாக இணைத்துள்ளது… நடிகை சரண்யா மகிழ்ச்சி!

vinoth

புதன், 12 பிப்ரவரி 2025 (08:28 IST)
நடிகர் தனுஷ்  புதுமுகங்களை வைத்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இது அவர் இயக்கத்தில் வெளியாகும் மூன்றாவது திரைப்படமாகும். இந்த படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது.

டீனேஜ் இளைஞர்களின் வாழ்க்கையில் குறுக்கிடும் காதலைப் பற்றிய படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யு தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன், ரம்யா ரங்கநாதன் என பலர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். ஏற்கனவே பாடல்கள் ரிலீஸாகி ஹிட்டாகியுள்ள நிலையில் தற்போது டிரைலர் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகை சரண்யா “என்னுடைய அடையாளமாக எப்படி நாயகன் படம் இருக்கிறதோ, அதுபோல வேலையில்லாப் பட்டதாரி படத்தையும் சொல்கிறார்கள். சிலபேர் என்னைப் பார்க்கும் தனுஷின் அம்மா வருகிறார் என்று சொல்கிறார்கள். சினிமா என்னை தனுஷுடன் ஒரு குடும்பமாக மாற்றியுள்ளது. இந்த படத்தில் நான் பவிஷுக்கு அம்மாவாக நடிக்கிறேன். செட்டில் தனுஷ் பொறாமைப்படுவதைப் பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்