தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மையோடு செயல்பட்டு வருபவர் தனுஷ். தற்போது அவர் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவிஷ், அனிகா, ப்ரியா ப்ரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் என முக்கிய கதாப்பாத்திரங்கள் அனைவருமே இளைஞர்கள்.
பிப்ரவரி 21ம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியாகும் இந்த படம் முழுக்க முழுக்க இளைஞர்களின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நாயகன் பவிஷ்க்கு ப்ரியாவுடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவனது முன்னாள் காதலி அனிகாவுக்கு வேறு நபருடன் திருமணம் நடக்க இருக்கிறது. முன்னாள் காதலியின் திருமணம் ஒருபக்கம் பவிஷை படுத்தி எடுக்க, மறுபக்கம் தனது திருமணத்திற்கும் தயாராக வேண்டிய நிலை. இந்த மனநிலையை மையப்படுத்தி படம் தயாராகியுள்ளது என்பதை தெளிவாக ட்ரெய்லரில் காட்டியுள்ளனர்.
மேலும் ட்ரெய்லரில் வரும் தனுஷ், இதுவொரு வழக்கமான காதல் கதை, ஜாலியா வாங்க, ஜாலியா போங்க என கூறுகிறார். இது இந்த காலத்து இளைஞர்களின் ட்ரெண்டில் உள்ள காதல் பற்றிய கதை என்பதால் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K