அஜித் நடித்த குட் பேட் அக்லி மற்றும் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராகி வருவதாகவும், ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், அஜித் படத்துடன் மோதலை விரும்பாத தனுஷ், தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் தான் அந்த படத்தை அவர் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தனுஷ் தரப்பிலிருந்து வந்தால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.