பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (17:32 IST)
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா நடிக்க இருக்கிறார்.

மணிரத்னம் தனது கனவுப்படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை இரண்டு கட்டங்களாக நடத்தி முடித்தார். படத்தில் நடிக்கும் கார்த்தி, ஜெயம்ரவி உள்ளிட்ட நடிகர்கள் அதில் கலந்துகொண்டனர். இந்நிலையில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.

ஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகள் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில் தெய்வ திருமகள், சைவம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த சாரா அர்ஜுன் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக அவர் குதிரையேற்றம் மற்றும் வாள் சண்டை ஆகியப் பயிற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்