பாகுபலி பாணியில் 2 பாகங்களாக தயாராகும் சங்கமித்ரா....

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (19:36 IST)
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள வரலாற்றுப் படம் ‘சங்கமித்ரா’. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில், ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் நடிக்கின்றனர். ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.


 

 
இந்த படத்தின் தொடக்கவிழா கேன்ஸ் பட விழாவில் நடக்க இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இந்த படத்தை பாகுபலி படம் போல் இரண்டு பாகங்களாக எடுக்க சுந்தர்.சி முடிவெடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அரண்மனை படத்தையே 2 பாகங்களாக சுந்தர். சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்