தமிழ் அறிவுஜீவிகளின் புகைப்படத்தோடு கவனம் ஈர்த்த சமுத்திரக்கனியின் அடுத்த பட போஸ்டர்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (10:59 IST)
நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த ரைட்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வசூலிலும் கலக்கியது. இந்நிலையில் இப்போது அவர் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பரமன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்துக்கு பப்ளிக் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமுத்திரக்கனியோடு காளி வெங்கட்டும் முக்கியமான வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் போஸ்டரில் தமிழ்நாட்டின் அறிவுஜீவிகளான சிங்காரவேலர், அயோத்தியதாச பண்டிதர், மபொசி, பாரதிதாசன் என பலரின் புகைப்படங்களும் இடம்பெற்று ரசிகர்கள் இடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்