உதயநிதிக்கு வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி?

Webdunia
சனி, 10 ஜூன் 2017 (17:43 IST)
உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கும் புதிய படத்தில், சமுத்திரக்கனி வில்லனாக நடிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.





ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், மலையாள நடிகை நமிதா பிரமோத் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தென்காசி, தேனி, மதுரைப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் உதயநிதி திரும்பி வந்தபிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில், வில்லனாக சமுத்திரக்கனி நடிக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரஜினியின் நண்பராக ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
அடுத்த கட்டுரையில்