அந்த படத்தில் நடித்தீர்கள்… இந்த படத்திலும் நடியுங்கள – சமீரா ரெட்டியை டார்ச்சர் செய்த இயக்குனர்!

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (17:39 IST)
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்ட சமீரா ரெட்டி பாலிவுட் இயக்குனர் ஒருவரால் பட வாய்ப்பை இழந்தது பற்றி கூறியுள்ளார்.

1980 ஆம் ஆண்டு ஹைத்ராபாத்தில் பிறந்த சமீரா ரெட்டி பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில்  துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலமாக புகழின் உச்சத்தை எட்டினார். அதன் பின் சில தமிழ் படங்களில் நடித்த அவர் காணாமல் போனார்.

தமிழ் படங்களை போலவே பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அங்கு அவருக்கான உண்டான மரியாதைக் கிடைக்கவில்லை. அதுபற்றி அவர் ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அது என்னவென்றால் ‘அவர் ஒரு படத்தில் நெருக்கமானக் காட்சி ஒன்றில் நடிக்க அது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த மற்றொரு இயக்குனர் தன் படத்திலும் அதைப் போன்ற கதைக்கு தேவையில்லாத காட்சியை உருவாக்கி விட்டார். ஆனால் முதலில் கதை சொல்லும் அந்த காட்சி இல்லை என நான் சொல்ல, ’அந்த படத்தில் மட்டும் நடித்தீர்கள் இல்லையா? எங்கள் படத்திலும் நடியுங்கள்…. அப்போதுதான் எங்களால் வியாபாரம் செய்ய  முடியும்’ எனக் கூறினார். அதனால் அந்த பட வாய்ப்பை வேண்டாம் என நிராகரித்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்