சமந்தாவின் நடிப்பில் உருவாகும் யசோதா… கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்!

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (16:12 IST)
சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கும் யசோதா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் சமந்தாவின் புதிய திரைப்படம் யசோதா. இந்த படத்தில் சமந்தாவுடன் வரலட்சுமி முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ண பிரசாத் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிசர்மா இசையமைக்கிறார். இந்த படத்தின் மீது அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என தற்போது படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோ வரும் மே 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்