சமந்தாவுக்கு தேதி குறிச்சாச்சு: கைகழுவ கோலிவுட் முடிவா?

Webdunia
வியாழன், 8 ஜூன் 2017 (22:02 IST)
தென்னிந்தியாவின் பிரபல நடிகை சமந்தாவின் திருமணம் அனேகமாக இருந்த வருடத்திற்குள் இருக்கும் என்றும் அதற்குள் ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க வேண்டும் என்றும் இருந்த நிலையில் தற்போது சமந்தா-நாகசைதன்யா திருமண தேதியின் அறிவிப்பு வெளியாகிவிட்டது.



 


இதன்படி சமந்தாவின் திருமணம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி ஐதராபாத்தில் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சமந்தா தற்போது இளையதளபதியுடன் 'தளபதி 61' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கும் 'சாவித்ரி' படத்திற்கும் பிரச்சனை இல்லை. ஆனால் திருமணத்திற்குள் விஷாலின் 'இரும்புத்திரை' மற்றும் அநீதிக்கதைகள்' ஆகிய படங்கள் முடிக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது

திருமணத்திற்கு பிறகு அதுவும் நாகார்ஜூனன் குடும்பத்தின் மருமகளான பின்னர் அவரை வைத்து கவர்ச்சி காட்சிகள் எடுக்க முடியுமா? என்ற சந்தேகம் இயக்குனர்களுக்கு இருப்பதால் சமந்தாவை கழட்டிவிட கோலிவுட் இயக்குனர்கள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமந்தா தன்னுடைய திருமணத்திற்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்