அதிகம் பார்க்கப்பட்ட சாய் பல்லவியின் பாடல்! 2வது இடத்துக்கு தள்ளப்பட்ட தனுஷ் பாட்டு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (11:03 IST)
யூடியூப் தளத்தில் சாய்பல்லவி அற்புதமாக நடனமாடிய பாடல் தென்னிந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கிறது. தனுஷின் பாடல் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.


 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தனுஷின் கொல வெறி பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது. கேட்டவுடன் எழுந்து ஆட வைக்கும் அந்த பாட்டு தமிழ் ரசிகர்களை தாண்டி உலகம் முழுவதும்  பல்வேறு மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் யூடியூப் தளத்தில் தென்னிந்திய அளவில் 172.7 மில்லியன் பார்வைகளுடன் முதல் இடத்தில் இருந்தது.

இந்நிலையில் தெலுங்கில் வருண் தேஜ் , சாய் பல்லவி வெளியான பிதா படத்தில் இடம்பெற்ற வொச்சிந்தே பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. சாய் பல்லவியின் முக பாவனைகள், நடனம் அற்புதமாக இருந்ததால் தெலுங்கு ரசிகர்கள் திரும்ப, திரும்ப வொச்சிந்தே பாடலை பார்த்து ரசித்தனர். தெலுங்கு மொழி பாடல்களில் அதிக வரவேற்பு பெற்ற பாடல் என்ற பெருமையை வொச்சிந்தே பாடல் பெற்றது.

இப்போது தென்னிந்தியாவில் அதிக பார்வைகள் பெற்ற டாப் பாடலாக உயர்ந்துள்ளது.  வொச்சிந்தே பாடல் 174 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. இதனால் 172.7 மில்லியன் பார்வைகள் பெற்ற தனுஷின் கொல வெறி பாடல் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்