பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா? இணையத்தில் பரவிய வதந்தியால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (16:47 IST)
பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொள்ள இருந்த போட்டியாளர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நான்காம் சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கானப் பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்வதற்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் இருவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக வதந்திகள் இணையத்தில் பரவின. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. அதனால் திட்டமிட்டபடி விரைவில் பிக்பாஸ் தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்