’ரோஜா’ சீரியல் நடிகை காதலருடன் திருமணம்

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (17:34 IST)
ரோஜா சீரியலில்  நடித்து பிரபலமான நடிகை  பிரியங்கா நல்காரிக்கு மலேசியா உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

தெலுங்கானா  மாநிலம்  ஐதராபாத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர், தெலுங்கு சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இப்படத்தை அடுத்து, சுந்தர் சி இயக்கத்தில், தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங், சம்திங், மற்றும் லாரன்ஸின் காஞ்சனா 3 படத்திலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த நிலையில், தமிழில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்த பிரியங்கா நால்காரி தன் நீண்ட நாள் காதலரான ராகுல் வர்மாவை திருமணம் செய்துகொண்டார்.

இதுகுறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. மேலும், ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்