கோலிவுட், டோலிவுட்டை அடுத்து மல்லுவுட் சென்ற பிரபல இந்தி இயக்குனர்

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (09:31 IST)
நிவின்பாலி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படமான ஆக்‌ஷன் ஹீரோ பிஜு பாலிவுட்டில் ரீமேக்காக இருக்கிறது.

நிவின் பாலி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆக்‌ஷன் ஹீரோ பிஜு திரைப்படம் வெளியாகி கேரளா மற்றும் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்ரித் ஷைன் இயக்கிய இந்தப் படம் ஒரு போலிஸ்காரர் மற்றும் போல்ஸ் நிலையம் சந்திக்கும் வித்தியாசமான மனிதர்கள் மற்றும் சம்பவங்களின் கோர்வையாக திரைக்கதை அமைக்கப்பட்டு உருவானது. வழக்கமான போலிஸ் மசாலாப் படங்களைப் போல அல்லாமல் போலிஸ்காரரகளை சாதாரண மனிதர்களாக சித்தரித்திருந்தது. நிவின் பாலியின் சிறப்பான நடிப்பால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படம் ரிலிஸாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார் ரீமேக்ப் புகழ் ரோஹித் ஷெட்டி. ரோஹித் ஷெட்டி தென் இந்தியாவில் வெற்றி பெரும் மசாலாப் படங்களை வெற்றிகரமாக பாலிவுட்டிற்கு கொண்டு சென்று வெற்றிப் படமாக்கும் திறமைக் காரர். இவர் ஏற்கனவே தமிழின் சிங்கம் மற்றும் தெலுங்கின் டெம்பர் ஆகியப் படங்களை இந்தியில் ரீமேக்கியிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களும் பாலிவுட்டிலும் வெற்றி பெற்றதை தனது அடுத்தப் படத்திற்கும் போலிஸ் கதையையே தேர்ந்தெடுத்திருக்கிறார். கோலிவுட், டோலிவுட்டை அடுத்து இம்முறை மல்லுவுட் பக்கம் சென்று ஆக்‌ஷன் ஹீரோ பிஜ்ஜு படத்தின் உரிமையை வாங்கி அதில் அக்‌ஷய் குமாரை ஹீரோவாக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்