மதம் மாறிய மகளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் கமல்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (17:01 IST)
நடிகர் கமலின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசன் பேட்டி ஒன்றில், தான் முதலில் நாத்திகராக இருந்ததாகவும் தற்போது புத்த மதத்துக்கு மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

 
இந்நிலையில் எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, ஆனால் கடவுளை நம்புகிறவர்களுக்கு எப்போதும் மதிப்பளிப்பேன். எனக்கு  புத்த வழிபாடு மிகவும் பிடிக்கும். அது மதம் சார்ந்ததல்ல என்றும், வாழ்வியலோடு கலந்தது என்றும், அதிலிருந்து நிறைய விஷயங்கள் கற்றுவருவதால் என்னை புத்த வழிபாட்டில் இணைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

 
இந்த விஷயம் அறிந்த கமல், மகளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஹாய் அக்‌ஷரா, நீ மதம் மாறிவிட்டாயா? அப்படி மாறியிருந்தாலும் என் அன்பு மாறாது. மதம் போன்று இல்லாமல் அன்பு நிபந்தனையற்றது. வாழ்க்கையை அனுபவி என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்